பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரிய ஹீரோ ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த மகத் கடைசியில் வில்லனாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

ஆரம்பத்தில் நல்ல பையன் என்ற பெயரை எடுக்காவிட்டாலும் கெட்ட பையன் என்ற பெயரில் இருந்து தப்பித்து கொண்டிருந்த மகத் கடைசியில் யாஷிகாவுடன் காதலில் விழுந்து கலவர்ம் செய்துவிட்டு தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
 தன் மீது அதிகம் அன்பு காட்டிய மும்தாஜிடம் கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் அவர் நடந்து கொண்டது சக போட்டியாளர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அவருக்கு பெரும் அவப்பெயரை சம்பாதித்து கொடுத்தது. 

டேனியை கடித்தது அடித்தது என அடுக்கடுக்காக அவர் செய்த குற்றங்களுக்கு எல்லாம் காரணம யாஷிகா மீதான அவர் காதல் தான் என்பது பிக் பாஸ் வீட்டில் பொதுவான கருத்து. பிக் பாஸ் வீட்டினுள் மகத் வருவதற்கு காரணமே அவரது காதலி பிராச்சி தான். அவர் தான் மகத்தை உற்சாகப்படுத்தி இங்கு அனுப்பி வைத்தார். மேலும் `வெளியிலிருந்து மகத்துக்கு தேவையான பொருள்களை வாங்கி அனுப்புவது என ஒவ்வொரு வேலையையும் அவருக்காக பார்த்து பார்த்து செய்த பிராச்சி, மகத் யாஷிகாவை காதலிப்பதாக சொன்ன போது மனமுடைந்து போய்விட்டார்.

அதன் பிறகு மகத்தை கூறித்து எந்த விதமான கருத்தும் கூறாத பிராச்சி. இதுவரை மகத்தை சந்திக்கவே இல்லை. பிராச்சி தன் மீது கோபமாக இருப்பதை அறிந்த மகத் அவரை சமாதானம் செய்யும் விதமாக இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் செய்திருக்கிறார். அதில் பிராச்சியுடன் கொண்டாடிய இனிமையான தருணம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதுதான் அவர்கள் கடைசியாக சேர்ந்து எடுத்துகொண்ட புகைப்படம் என்றும் கூறப்படுகிறது.

இந்த புகைப்படத்தில் என் காதல், என் உலகம் எல்லாமே பிராச்சி தான் என்று கூறி இருக்கிறார் மகத். இதனால் இந்த படம் தற்போது வைரல் ஆகி இருக்கிறது. ஒரு முறை பிராச்சியும் மகத்தும் சந்தித்து பேசினால் அவர்கள் சமாதானம் ஆகிவிடுவார்கள் என்பதே மகத்தின் நண்பர்களின் கருத்து. அதற்கு தான் மகத் இப்படி தூதுவிட்டிருக்கிறார் போல.