‘களவாணி’ என்கிற ஒற்றை ஹிட்டுக்குப் பிறகு ஆவரேஜ் அல்லது அதற்கும் கீழான படங்களில் மட்டுமே நடிப்பது என்று குலதெய்வம் கோவிலில் சத்தியம் செய்துகொண்டவர் போல் வலம் வந்த விமலை கட்டக்கடைசியாக ‘மன்னர் வகையறா’ படத்தில் வச்சி செஞ்சி வீட்டில் உட்காரவைத்தவர் இயக்குநர் பூபதி பாண்டியன்.

கைவசம் பழைய கமிட்மெண்டாக ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படம் மட்டும் மிச்சம் இருக்க, வருவோர் போவோரிடமெல்லாம் 90,80,70 என்று லட்சங்களில் சம்பளம் கேட்டுக்கொண்டிருந்தார் விமல். சுமார் ஆறு மாத காலமாக அவர் வீட்டுப்பக்கம் காக்கா,குருவிகள் கூட எட்டிப்ப்பார்க்காத நிலையில் தன்னுடைய நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிக்கொண்டிருக்கிறார்.

நடிகர்களுக்கு வீட்டில் கொஞ்சகாலம் சும்மா உட்காரும்போதுதான் ஞானோதயமே வரும் என்கிற வழக்கப்படி, இனி நல்ல கதைகளில் அட்வான்ஸ் கேட்காமல் கூட நடிப்பது, இறிதியில் பட வெளியீட்டின்போது தயாரிப்பாளர் தருவதை வாங்கிக்கொள்வது என்கிற முடிவாம் அது.

விமலுக்கு உடம்பெல்லாம் அச்சம் இருக்கு.