கடந்த 19ம் தேதி இரவு ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2' படத்தின் ஷூட்டிங், சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடைபெற்று கொண்டிருந்தது. இரவு சுமார் 9 மணி அளவில் சண்டைக்காட்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அப்போது பகல் போன்ற வெளிச்சம் ஏற்படுத்துவதற்காக ராட்சத கிரேன் அந்த இடத்தில் அமைக்கப்பட்ட இருந்தது. அப்போது ராட்ச கிரேன் திடீரென அறுந்து விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மதுசூதனராவ் , ஆர்ட் உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

கிரேன் ஆபரேட்டர் ராஜன், தயாரிப்பு நிறுவனமான லைகா, கிரேன் உரிமையாளர், தயாரிப்பு மேலாளர் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக முதலில் கைது செய்யப்பட்ட கிரேன் ஆபரேட்டர் ராஜனுக்கு அம்பத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. 

இதையும் படிங்க: எல்லை மீறும் மீரா மிதுன்... இதுதான் முழுநேர வேலையேவா..? தலையில் அடித்துக்கொள்ளும் நெட்டிசன்கள்...!

இந்த விபத்து தொடர்பாக இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவிற்கு நடிகர் கமல் ஹாசன் கடிதம் எழுதியிருந்தார். அதில் இனி படப்பிடிப்பின் போது கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் தயாரிப்பு நிறுவனமே ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். 

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டாருக்கு கல்யாணமாகி இன்றுடன் 39 வருஷமாச்சு...மனைவி லதாவுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள்...!

கமலின் அந்த கடிதத்திற்கு பதிலளித்துள்ள லைகா நிறுவனம், உங்களது கடிதத்திற்கு முன்பே விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துவிட்டோம். லைகா நிறுவனம் எப்போதும் உலக தரத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருந்த உங்களுக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் பொறுப்பு இருக்கிறது. உங்கள் இருவரின் மேற்பார்வையில் தான் முழுபடப்பிடிப்பும் நடைபெற்றது என்பதை நினைவூட்டுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.