Asianet News TamilAsianet News Tamil

‘தர்பார்’ படத்தில் சசிகலாவை சீண்டி வசனம்... பொதுவா சொன்னோம்.. வசனத்தை நீக்குறோம்.. பின்வாங்கியது லைகா!

இந்த வசனம் படத்தில் இடம் பெற்றது குறித்து சசிகலா தரப்பும் அமமுகவினரும் அதிருப்தி அடைந்தனர். இதுதொடர்பாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறிப்பிடுகையில், “போலீஸ் அறிக்கையில் சசிகலா ஷாப்பிங் போனதாக எங்கேயும் குறிப்பிடவில்லை. அந்தக் காட்சிகளை படத்தில் நீக்க வேண்டும். அப்படி நீக்கப்படாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்” என்று எச்சரித்திருந்தார்.

Lyca Explain about sasikala' dialogue in dharbar
Author
Chennai, First Published Jan 11, 2020, 7:59 AM IST

 ‘தர்பார்’ படத்தில் கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர, தனிப்பட்ட நபரை குறித்து எழுதப்பட்டது அல்ல என்று லைகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.Lyca Explain about sasikala' dialogue in dharbar
ரஜினி நடிப்பில் வெளியாகி உள்ள ‘தர்பார்’ படத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலாவை மனதில் வைத்து ஒரு வசனம் எழுதப்பட்டிருந்தது. ‘காசிருந்தால் ஷாப்பிங்கே போகலாம்’ என்று சிறைச்சாலையில் ரஜினியிடம் சொல்வது போன்று அந்தக் காட்சி வைக்கப்பட்டிருந்தது. இந்தக் காட்சி பற்றி செய்தியகள் வெளியான நிலையில், அமைச்சர் ஜெயக்குமார், “பணம் பாதாளம் வரைக்கும் பாயும் அதேசமயத்தில் பணம் சிறைச்சாலை வரைகூட பாயும் என்று சசிகலாவை சுட்டிக்காட்டி படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணையில் உள்ளது. எனவே அதை பற்றி பேச விரும்பவில்லை. திரைப்படங்கள் வாயிலாக நல்ல கருத்துக்களை தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

Lyca Explain about sasikala' dialogue in dharbar
இந்த வசனம் படத்தில் இடம் பெற்றது குறித்து சசிகலா தரப்பும் அமமுகவினரும் அதிருப்தி அடைந்தனர். இதுதொடர்பாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறிப்பிடுகையில், “போலீஸ் அறிக்கையில் சசிகலா ஷாப்பிங் போனதாக எங்கேயும் குறிப்பிடவில்லை. அந்தக் காட்சிகளை படத்தில் நீக்க வேண்டும். அப்படி நீக்கப்படாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்” என்று எச்சரித்திருந்தார்.Lyca Explain about sasikala' dialogue in dharbar
இந்நிலையில் இந்தச் சர்ச்சை வசனம் தொடர்பாக லைகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “எங்களின் ‘தர்பார்’ திரைப்படத்தில் கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர, எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறித்து எழுதப்பட்டது அல்ல. இருப்பினும், அந்த வார்த்தைகள் சிலரது மனதை புண்படுத்துவதாக தெரியவந்தால், படத்திலிருந்து நீக்குவதாக” தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios