இந்தியில் முடிசூடாத ராணியாக வலம் வருபவர் கரீனா கபூர். திருமணத்திற்கு பிறகும் கூட ஷாரூக்கான், சல்மான் கான், அக்‌ஷய் குமார் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வருகிறார். காந்த கண்ணழகி கரீனா கபூருக்கு இந்தியாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். பாலிவுட் படங்களில் மட்டுமல்லாது, ஃபேஷன் ஷோ, விளம்பரம் என அனைத்திலும் பிசியாக நடித்து வருகிறார் கரீனா. 

வெளிநாடுகளுக்கு செல்லும் போது தன்னை சந்திக்க வரும் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதை கரீனா கபூர் வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் ஃபேஷன் ஷோ ஒன்றில் பங்கேற்பதற்காக சிங்கப்பூர் சென்ற கரீனா கபூர் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். ராம்ப் வாக் செல்வதற்காக ஹாட் உடையில் தயாராக இருந்த கரீனா கபூரை, இந்தோனேசியாவைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் சந்தித்துள்ளார். கரீனாவை பார்த்த சந்தோஷத்தில் கதறி அழுத ரசிகரை, மார்போடு அணைந்து அமைதிப்படுத்திய கரீனா, அவருடன் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டார். 

இந்தோனேசிய ரசிகர் உடன் செம்ம குளோஸ் ஆக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கரீனா கபூர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் அப்புகைப்படங்களைப் பார்த்த இந்திய ரசிகர்கள் கரீனா மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர். இந்திய ரசிகர்களுக்கு எல்லாம் கிடைக்காத சான்ஸ், இந்தோனேசிய ரசிகருக்கு மட்டும் கிடைக்கிறதே என ஏக்கத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.