கற்பு பற்றி பேசினாலும், கட்சி பற்றிப் பேசினாலும் எதற்கும் தயங்காமல் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி, பல விமர்சனத்திற்கும் ஆளாகுபவர் நடிகை குஷ்பு. 

இவர் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில்... "திமுகவிலிருந்து அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டதாக வெளியாகும் தகவல்களுக்கு பதில் கூறாமல், தொடர்ந்து மௌனம் சாதிப்பது ஏன்? என கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதில் அளித்த குஷ்பு, "இந்த விவகாரத்தில், எந்தக் கட்சியின் மீது அவர் குற்றச்சாட்டு வைத்தாரோ, அதே கட்சியினர் உடனடியாக பதிலடி கொடுத்து விட்டதாகவும் இதனால் இந்த கேள்விக்கு நான் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை என்று நினைப்பதாக கூறியுள்ளார்.

இதைதொடர்ந்து, திமுகவில் இருந்து நீக்கப்பட என்ன காரணம் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள குஷ்பு, "திமுக-விலிருந்து நான் வெளியேறி நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. நான் எதற்காக அந்த கட்சியை விட்டு வெளியேறினேன் என்பது தலைவர் கருணாநிதிக்கு நான்றாக தெரியும். 

மேலும் கலைஞர், ஸ்டாலின் என்று யார்மீதும் எனக்கு எந்த கோபமும் இல்லை. என்னுடைய அரசியல் பயணத்தை திமுக -விலிருந்து தான் ஆரம்பித்தேன். எனவே, திமுக தான் என்னுடைய தாய்வீடு இன்றைக்கு கலைஞரை, 'அப்பா' என்று தான் அழைக்கிறேன். செல்வி அக்கா எனக்கு உடன்பிறந்த அக்காவை போல, இன்று வரை, செல்வி, கனிமொழி, மற்றும் திமுக தலைவர்கள் பலரோடும் நான் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். மற்றபடி  'நான் ஏன் திமுக-வை விட்டு வெளியேறினேன் ' என்ற சிதம்பர ரகசியத்தை தெரிந்து கொண்டு மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்? இந்த செய்தியால், மக்களுக்கு என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது? என தெரிவித்தார்.

பின் உடல் நலம் குன்றியதால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், கருணாநிதி பற்றி கூறுகையில்... அப்பாவைப் படதடவை நேரில் போய்ப் பார்த்துவிட்டேன். செல்வி அக்கா, தமிழரசு அண்ணன் ஆகியோர் இருந்தார்கள். அவரால் பேச முடியவில்லை. ஆனாலும் நாம் பேசுவதை நன்றாகக் கேட்கிறார். என்று கூறியுள்ளார் நடிகை குஷ்பு.