மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி, தன் நண்பர்களுடன் ஹோட்டல் ஒன்றிற்கு செல்லும்போது மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து சென்றுள்ளார். இதை ரசிகர்கள் கண்டு புகைப்படம் எடுக்க துவங்கியதும் அங்கிருந்து காரில் ஓட்டம் பிடித்துள்ளார். இந்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பாலிவுட், கோலிவுட், டோலிவுட், என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி.

இவருடைய மறைவுக்குப் பின் ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்வி கபூர், மற்றும் குஷி கபூர், என இருவருமே தற்போது திரையுலகில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். அந்த வகையில் ஜான்வி கபூர், அறிமுகமான 'தடக்' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து, சிறந்த கதையை தேர்வு செய்து நடிக்க தயாராகி வருகிறார். ஒரு சில படங்களில் நடிக்கவும் தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஜான்வியை தொடர்ந்து, அவருடைய சகோதரி குஷி கபூரும், திரையுலகில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். இந்நிலையில் கடந்த ஓரிரு தினத்திற்கு முன், ஹோட்டலில் சாப்பிடுவதற்காக குஷி தன்னுடைய நண்பர்களுடன் சென்றுள்ளார்.

அப்போது அவர் மிகவும் குட்டையான ஆடை அணிந்து சென்றுள்ளார். இவர் சாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது, ரசிகர்கள் அவரை அடையாளம் கண்டுவிட்டனர். இதை தொடர்ந்து அவருடன் சென்று புகைப்படம் எடுக்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். சிலர் அவரை புகைப்படம் எடுத்தனர்.

இதனால், அவசர அவரசமாக குஷி, அங்கிருந்து காரில் ஏறி, ரசிகர்களின் செல்போன் புகைப்படத்தில் இருந்து தப்பியுள்ளார்.