இந்தியாவில் சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரி குஷ்பு, அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு. 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி முன்னணி ஹீரோக்களும் குஷ்புவுடன் ஜோடி போட காத்திருந்தனர். அப்போது எப்படி சினிமாவில் பிசியாக இருந்தாரோ அதே போல் தான் இப்போதும், சினிமா, அரசியல், சின்னத்திரை என சகலகலா வள்ளியாக சுற்றிச் சுழல்கிறார். 

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டாருக்கு கல்யாணமாகி இன்றுடன் 39 வருஷமாச்சு...மனைவி லதாவுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள்...!

பருவ வயதான 2 மகள்களின் தாய், அன்பான கணவர் என ஹாப்பியாக போய்கொண்டிருக்கிறது குஷ்புவின் வாழ்க்கை. தற்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்துள்ள குஷ்பு அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க: சீமான் ஆட்கள் கேவலமா பேச நீங்களும்தான் காரணம்... பார்த்திபனை பஞ்சாயத்துக்கு கூப்பிடும் விஜயலட்சுமி...!

சும்மா கொழு, கொழுன்னு நச்சுன்னு இருந்த குஷ்பு, சூப்பர் ஸ்டார் படத்திற்காக உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். அன்றும் முதல் இன்று வரை குஷ்புவிற்கு அழகே அவரது கும்முன்னு இருக்கும் உடல்வாகு தான், அதை குறைத்தது ரசிகர்களை சற்றே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

இருந்தாலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குஷ்பு வெளியிட்டுள்ள ஸ்லீம் லுக் செல்ஃபிக்களை பார்த்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இதற்கு முன்னதாக மகள் அனந்திதா தனது குண்டான உடல் எடையை குறைத்து சூப்பர் க்யூட் லுக்கிற்கு மாறிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. 

இதையும் படிங்க: "இருட்டில்" சுந்தர்சியை புரட்டி எடுத்த நடிகை... கையில் மதுக்கோப்பையுடன் கட்டிலில் அதகளமான போஸ்...!

அப்போது மகளை ஊக்குவிப்பதற்காக குஷ்புவும் டையட் இருந்திருப்பார் போல. அதனால் தான் இவ்வளவு சீக்கிரம் உடல் எடையை குறைத்து புதுப்பொலிவில் சும்மா தகதகன்னு மின்னுகிறார் என்று ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். விதவிதமான புடவையில் அளவான மேக்கப்புடன் குஷ்பு எடுத்துள்ள புகைப்படங்கள் இதோ...