இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பன்முகம் கொண்ட டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் பதிவிட்டதாக கூறி, "Kuran Arasan T Rajendar " என்கிற போலி ட்விட்டர் கணக்கு ஒன்று துவங்கி, அடுத்த முதல்வர் எங்க அப்பத்தான் என அஜித்தை வம்புக்கு இழுத்ததாக கூறப்பட்டது.

இந்த தகவலை மார்ச் 19 தேதி ஏசியா நெட் தளத்தில்  வெளியிட்டிருந்தோம். மேலும் பல்வேறு சமூவலைத்தளங்களிலும் இது குறித்த செய்திகள் வெளியாகி இருந்தது. பின்னர் இந்த போலி கணக்கு நீக்கப்பட்டது. ஆனால் இந்த போலி கணக்கில் பதிவிட்ட செய்தியை அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியது. 

பின்னர் இந்த சர்ச்சை குறித்து குறளரசனின் தந்தை டி.ராஜேந்தர் விளக்கம் கொடுத்தார்..  அதாவது இந்த தகவல் முற்றிலும் வதந்தி என தெரிவித்தார். 

குறளரசனின் திருமண சமயத்தில் இந்த சர்ச்சை வந்து ஓய்ந்தது குறிப்பிடத்தக்கது.