சினிமா துறையை பொறுத்த வரை கோலிவுட், பாலிவுட் என அனைத்து சினிமா துறையிலும் நடிகைகளுக்கு பாலியல் சம்பந்தாமான தொல்லைகள் இருந்து வருவதாக தொடர்ந்து பல புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதே போல் தற்போது நடிகைகள் சிலர் தங்களுக்கு இழக்கப்படும் பாலியல் துன்புறுத்தலை தைரியமாக வெளியில் கூறி வருகின்றனர். 

கொரிய நாட்டு நடிகை:

இந்நிலையில், கொரியாவை சேர்ந்த நடிகை ஒருவர் அந்நாட்டு பிரபல திரைப்பட இயக்குனர் கிம் மற்றும் நடிகர் சோ ஜே ஹ்யூன் ஆகிய இருவரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். 

திரையுலகத்தை விட்டு விலகிய நடிகை:

இந்த கொடூர சம்பவத்திற்கு பின் திரையுலகை விட்டே அந்த கொரியன் நடிகை விலகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதே இயக்குனர் மீது இன்னும் இரண்டு நடிகைகளும் பாலியல் புகார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.