தமன்னா:

தமிழ் பட உலகில், இன்னும் சில வருடங்கள் கதாநாயகியாக நீடித்து நிலைத்து நிற்க விரும்புபவர்களின் நடிகை தமன்னாவும் ஒருவர். அதற்காக "தற்போது ஏகப்பட்ட கவர்ச்சி காட்டடவும் தயார் என்பது போல் இயக்குனர்களிடம் கூறி வருகிறாராம். 

அதேபோல் கதாநாயகிகளுக்கு முக்கிக்கியதுவம் உள்ள படங்களாக இருந்தால் தன்னுடைய சம்பளத்தையும் குறைத்து கொள்ளவும் தயாராக இருக்கிறாராம்.. என்ன செய்வது அவருக்கு போட்டிகள் அதிகமாவதால்  இந்த முடிவை எடுத்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ்:

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக மாறி இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான 'சாவித்திரி' திரைப்படம்  நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்... இதை தொடர்ந்து வெளியான படங்கள் தோல்வியை தழுவியது. 'சர்கார்' படத்தில் வரலக்ஷ்மி நடிப்புக்கு கிடைத்த பாராட்டு கூட இவருக்கு கிடைக்க வில்லை. ஆனால் என்ன ஆனாலும் சம்பளம் ஒரு கோடி தான் வேண்டும் என அடம்பிடிக்கிறாராம் கீர்த்தி.

திரிஷா:

தமிழ் திரையுலக 'கனவுக்கு கணனிகளில்' ஒருவராக இருந்து வரும் திரிஷா, 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில், 'ஜெஸ்சி' கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த காதல் தேவதை ஆனார். சமீபத்தில் திரைக்கு வந்த '96 ' படத்தில் 'ஜானு' என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் அடி மனதில் இடம் பிடித்தார்.

10 வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாக நடித்து வரும் திரிஷா , இன்னும் சில வருடங்கள் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காமல் இருக்க தனக்கு பொருந்தும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வளர்ந்து வரும் நடிகைகளிடம் மோதி பார்க்க தயாராகி விட்டாராம் .