நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி நாக் அஸ்வின் என்கிற இளம் இயக்குனர் தமிழில் 'நடிகையர் திலகம்' என்கிற பெயரில் சாவித்திரியை மைய்யமாக வைத்து படம் இயக்கிக்கொண்டிருக்கிறார், இதே படம் தெலுங்கில் 'மகாநதி' என்கிற பெயரில் எடுக்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தில், நடிகையர் திலகம் கதாபாத்திரத்தில் கீர்த்திசுரேஷ் நடிப்பதாக கூறப்பட்டது . நடிகை சமந்தா பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில்.

இந்த படத்தில் அனுஷ்காவை நடிக்க வைக்க இயக்குனர் அவரை அணுகியுள்ளாராம், மேலும் இந்த திரைப்படத்தில் ஜெமினிகணேசன் கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யாவை அணுகியபோது அந்த வாய்ப்பை சூர்யாவை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ள இந்த படத்தில் அனுஷ்காவே சாவித்திரி வேடத்தை ஏற்று நடித்தால் நன்றாக இருக்கும் என பலர் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கீர்த்தி சுரேஷ், சாவித்திரி வேடத்தில் நடிப்பதாக கூறியதில் இருந்து பலர் இணையதளங்களில் சாவித்திரி வேடத்திற்கு கீர்த்தி செட் ஆக மாட்டார் என கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

இதனால் தற்போது அனுஷ்காவை, இயக்குனர் நாடி இருப்பது சாவித்திரியின் வேடத்தில் அனுஷ்டிகாவை நடிக்க வைப்பதற்க்கா? அல்லது மற்றொரு முக்கிய கதாபாத்திரத்திற்கா? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.