ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் விஜய் அரசியல் சார்ந்து சில கருத்துகளை தெரிவித்துள்ளார். ‘சர்கார்’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் தனது முதலமைச்சர் குறித்து விஜய் பேசும்போது, ஒருவேளை முதலமைச்சர் ஆனால், நான் முதலமைச்சராக நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

அவரது இந்த பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது. நடிகர் விஜய் பேச்சு குறித்து, அமைச்சர் உதயகுமார் பேசுகையில், விஜய் சினிமாவில் சர்க்கஸ் காட்டும் வேலையோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் நினைப்பது போல் முதலமைச்சர் பதவி என்பது ஒரு பக்கத்துக்கு வசனம் பேசிவிட்டு கேரவனில் மூன்று மணி நேரம் ரெஸ்ட் எடுப்பது கிடையாது என்று விஜய்க்கு எதிராக கடுமையாக விமர்சனத்தை முன் வைத்திருந்தார்.

 

இந்த நிலையில், நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில், சர்கார் விழாவில் விஜய் பேசியதைப் பார்க்கும்போது, அவருக்கு யாரோ எழுதி கொடுத்திருப்பார்களோ என்று தோன்றுகிறது.

"சர்கார் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேச்சை கேட்டேன். அசத்தலான பேச்சு, செம பஞ்ச்!  அவர் காந்தி பற்றியும் அரசியல் பற்றியும் பேசியதை பார்க்கையில் அவருக்கு யாரோ எழுதிக் கொடுத்திருப்பார்களோ என ஆச்சரியப்பட்டேன்" என்று நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆக கஸ்தூரியின் டுவிட்டர் கூற்றுப்படி பார்த்தால் விஜய்க்கு யாரோ மண்டபத்தில் எழுதி கொடுத்திருப்பார்களோ என்ற ஐயம் எழுந்துள்ளது.