Asianet News TamilAsianet News Tamil

”எக்ஸிட் கருத்துக் கணிப்புகள் எதையுமே நம்பவேண்டியதில்லை”... மீடியாக்களை விளாசும் கருணாஸ்...

”தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எதையுமே நம்பவேண்டியதில்லை. ஏனெனில் நான் திருவாடனை தொகுதியில் போட்டியிட்டபோது வெற்றிபெறுவேன் என்று ஒரு கருத்துக் கணிப்பு கூட வெளியாகவில்லை’ என்கிறார் நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ்.

karunas mla's interview regarding exit polls
Author
Madurai, First Published May 21, 2019, 5:34 PM IST

”தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எதையுமே நம்பவேண்டியதில்லை. ஏனெனில் நான் திருவாடனை தொகுதியில் போட்டியிட்டபோது வெற்றிபெறுவேன் என்று ஒரு கருத்துக் கணிப்பு கூட வெளியாகவில்லை’ என்கிறார் நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ்.karunas mla's interview regarding exit polls

நடிகர் சங்கக் கட்டிடத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்துவரும் நிலையில் அப்பணிகளுக்காக ஒரு லட்சம் நன்கொடை வழங்கிய கருணாஸ் அதன்பின்னர் மதுரையில் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,”தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்காக நான் ரூ.1 லட்சம் வழங்கியுள்ளேன். மேலும் நிதி தேவைப்படுகிறது. இது தொடர்பாக நடிகர் சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசி கலை நிகழ்ச்சி மூலம் நிதி திரட்ட ஏற்பாடு செய்யப்படும்.

கருத்து கணிப்பு மீதான நம்பகத்தன்மை போய் விட்டது. தனியார் நிறுவனம் நடத்தும் கணிப்புகள் பொய் கணிப்புகளாக உள்ளன.2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருவாடானை தொகுதியில் நான் வெற்றி பெறுவேன் என எந்த கருத்துக் கணிப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் நான் வெற்றி பெற்றேன்.karunas mla's interview regarding exit polls

3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதில் நம்பகத்தன்மை இல்லை. இதனால் தான் கோர்ட்டு அதற்கு தடை விதித்துள்ளது.அ.தி.மு.க.வை பொறுத்த வரை சசிகலா தான் பொதுச்செயலாளர். அவர் சிறையில் இருந்து வந்த பிறகு தான் அந்த கட்சியின் நிலைப்பாடு தெரியவரும்.அ.தி.மு.க. பிளவுபட்டு நிற்பது பிற கட்சிகளுக்கு சாதகமாக உள்ளது. நடந்து முடிந்த தேர்தலை பொறுத்தவரை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. இது தான் என் நிலைப்பாடு’ என்று கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios