திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவ மனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கும் இவருடைய உடல் நிலை தற்போது சீராக உள்ளது என இவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் திமுக தலைவரை சந்திக்க வரும் பிரபலங்கள் பலரும், தற்போது திமுக தலைவர் நலமாக உள்ளதாக கூறிவருகிறார்கள். இதனால் திமுக தொண்டர்கள் சற்று மன நிம்மதி அடைத்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்க்காக 'தலைவா' படம் பிரச்சனையில் இருந்த போது கலைஞர் அறிக்கை வெளியிட்ட தகவல் குறித்து பாப்போம்:

நடிகர் விஜய் நடிப்பில், கடந்த 2013 ஆம் ஆண்டு ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'தலைவா'. இந்த படத்தில் அரசியல் சம்மந்தமான காட்சிகள் இடம்பெற்றிருந்ததால், இது ஒரு அரசியல் படம் என கூறி சில கட்சினர் இந்த படத்தை வெளியிடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் இடம்பெற்ற Time To Lead என்ற வசனம் தான். மீறி  படத்தை வெளியிட்டால் திரையரங்கில் வெடிகுண்டு வைக்கப்படும் என்கிற மிரட்டலும் இருந்தது. பின் அதையும் மீறி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த பட சர்ச்சை பெரிதாக வெடித்தால்.... பட வெளியீடு குறித்து பேசுவதற்காக நடிகர் விஜய் மற்றும் அவருடைய தந்தை சந்திரசேகர் இருவரும் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க கொடநாடு வரை சென்றார்களாம். ஆனால் பார்க்கமுடியாமல் போனது. 

இதனால் படம் வெளியீடு பின் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில்  முன்னாள் முதல்வராக இருந்த கருணாநிதி விஜய்க்கு ஆதரவாக ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் 'தலைவா' படம் தம்பி விஜய் நடித்து ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்திருக்கிறார்கள்.

அரசை தாக்குவது போல வசனம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது அரசியல் படம் அல்ல, யாரோ வதந்திகளை பரப்புகிறார்கள். அதனை நம்ப வேண்டாம் என கூறியிருந்தார்.

மேலும் விஜய்யின் அப்பா சந்திரசேகரும் அரசுக்கு ஆதரவாக பலமுறை செயல்பட்டவர். இந்த அரசுக்கு வேண்டியவர் என குறிப்பிட்டிருந்தார். இதன் பிறகே இந்த படத்தின் மீதான சர்ச்சை சற்று தணிந்தது.