‘சர்கார்’ பஞ்சாயத்துக்கள் படம் ரிலீஸாகும் வரை திசைக்கொன்றாய் முளைத்துக்கொண்டேயிருக்கும்போல.

ஆடியோ ரிலீஸுக்கு மறுநாள் சாதாரண சர்ச்சையாயிருந்த விஜய் குறித்த கருணாகரனின் கமெண்ட், தற்போது அவரை கமிஷனர் ஆபிஸ் வரை கொண்டு சென்றிருக்கிறது.

'சர்கார்’விழாவில் உசுப்பேத்துறவன்கிட்ட உம்’முன்னும் கடுப்பேத்துறவன்கிட்ட கம்’முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும் என்று வலைதளத்தில் அட்டக்காப்பி அடித்து ஒரு பஞ்ச் பேசியிருந்தார் விஜய்.இதுபற்றி தனது சமூக வலைதளப்பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகர் கருணாகரன், "இந்த அட்வைஸ் மற்றவர்களுக்கு தானா. உங்கள் ரசிகர்களுக்கு இல்லையா" என கேள்வி எழுப்பினார். 

அவ்வளவு தான், ’டேய் ஒருத்தன் முட்டுச்சந்துல சிக்கிட்டான். வாங்கடா’ என்று விஜய் ரசிகர்கள் கருணாகரனை அதிமதுரமான வார்த்தைகளால் அர்ச்சித்து வந்தனர்.
அதன் உச்சக்கட்டமாக ’கருணாகரன் காலமானார்’ போஸ்டர்களும் அடித்து ஒட்டினர்.


சரி, அடுத்து ஒரு விஜய் படம் வந்தால் சேர்ந்து நடிக்கவேண்டி இருக்குமே என்று ஓரளவு பொறுமை காத்த கருணாகரன் நேற்றைய சாவு போஸ்டர்களைத் தொடர்ந்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க முடிவு செய்தார்.