'காலா' படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் புதுமையான கதை அம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் திரைப்படம் 'பேட்ட'.  இந்த படத்தை அதிக பொருட்செலவில் உருவாக்கி வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

ரஜினி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில் கடந்த வாரம் ரஜினியின் யங் லுக் போஸ்டர் லீக் ஆகி இணையத்தில் வேகமாக வைரல் ஆகி வந்தது.

இதனால், இதை ரசிகர்கள் ஆர்வமிகுதியில் ஷேர் செய்து வைரல் ஆக்கினர். மேலும் பிரபல தனியார் தொலைக்காட்சியும் இதை ஷேர் செய்து நியூஸாக போட கார்த்திக் சுப்புராஜிற்கு இது கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 

இதனால் மிகவும் அப்செட் ஆன, கார்த்தி சுப்புராஜ் ட்விட்டர் பக்கத்தில், இதை உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கவில்லை, ஒரு தொலைக்காட்சிக்கு என்று சில கட்டுப்பாடுகள் வேண்டும் என கூறியுள்ளார் கண்டிக்கும் வகையில் கூறியுள்ளார்.