பல வெற்றி படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் கரண்ஜோஹரின் அவருடைய அந்தரங்கமான செக்ஸ் வாழ்க்கை குறித்து கடந்த பல வருடங்களாக சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளிவந்து அவரை சங்கடத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் கரண்ஜோஹர் தன்னுடைய சுயசரிதை புத்தகமான' 'An Unsuitable Boy' என்ற புத்தகத்தில் இதுகுறித்து முதல்முறையாக கனத்த மனதுடன் விளக்கம் அளித்துள்ளார்.

எனது செக்ஸ் வாழ்க்கை குறித்து பலர் பலவிதமாக பேசி வருவதுண்டு. அதற்காக நான் வருத்தப்பட போவதில்லை என்றும்.

ஆனால் அதே நேரத்தில் நான் எனது செக்ஸ் வாழ்க்கை குறித்து வெளியே கூறினால் நான் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை வரும். ஏனெனில் எனது உறவு குறித்து புரிந்து கொள்ள முடியாத சட்டதிட்டங்கள் உள்ள நாட்டில் நான் வாழ்ந்து வருகிறேன் என மறைமுகமாக கூறியுள்ளார்.

எனவே நான் அந்த மூன்றெழுத்து வார்த்தையை வெளிப்படயாக கூறப்போவதில்லை என்றும்.

மேலும் தனது குடும்பத்தினர் எனக்கு முழு அளவில் ஆதரவாக உள்ளதாக அந்த புத்தகத்தில் கரண்ஜோஹர் தெரிவித்துள்ளார்.

பூனம் சாக்சேனா உதவியுடன் கரண் ஜோஹர் எழுதியுள்ள இந்த புத்தகம் இம்மாத இறுதியில் வெளிவரவுள்ளது. இந்த புத்தகம் நிச்சயம் உணர்வுபூர்வமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.