பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் தனது லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.இவர் லண்டனில் இருந்து,  திரும்பி வந்தபோது அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஆபாசத்தின் உச்சம்.... சட்டையை மட்டும் அணிந்து கொண்டு படுகவர்ச்சி போஸ் கொடுத்த சீரியல் நடிகை....!

அப்போதும் கூட தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளாமல், மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற பார்ட்டியில் பங்கேற்று ஜாலியாக பொழுதை கழித்து வந்தார். அதன்பின்னர் உடல்நிலை மோசமாகவே  லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இதையும் படிங்க: அமலா பால் அழகை வர்ணித்த “மாஸ்டர்” பிரபலம்... வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு...!

இதையடுத்து கனிகா கபூருடன் பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டதால், அவர்களுக்கும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கனிகா தான் ஒரு திரைத்துறை பிரபலம் என்பதால் அங்குள்ள விதிமுறைகளை பின்பற்றாமல் ஓவர் ஆட்டம் போடுவதாக கூறப்பட்டது. 

இதையும் படிங்க: கழுத்துக்கு கீழே அசத்தல் டாட்டூ... ரசிகர்கள் பார்வைக்காக ரகசிய இடத்தை திறந்து காட்டிய டாப்சி...!

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒவ்வொரு 48 மணி நேரத்திற்கு ஒரு முறையும் பரிசோதனை நடத்தப்படும். அப்படி கனிகா கபூரிடம் 5வது முறையாக நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனாலும் உடல் நிலையில் கவலைப்படும் படியான பெரிய மாற்றங்கள் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.