பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் மும்பை பாந்த்ரா பாலி ஹில் பகுதியில் 3075 சதுர அடி பங்களா வீட்டை ரூ.20.07 கோடி கொடுத்து விலைக்கு வாங்கி உள்ளார். இந்த வீட்டை வாங்குவதற்கு பிரகாஷ் என்ற தரகர் ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டு உதவி செய்துள்ளார். 

ஆனால் பேசியபடி கங்கனா ரணாவத் தரகர் கமிஷன் கொடுக்கவில்லை என்று பாந்த்ரா போலீசில் தரகர் பிரகாஷ் புகார் கொடுத்தார். இது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குபடி கங்கனா ரணாவத்துக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கங்கனா, 'பாலி ஹில் பகுதியில் கடந்த வருடம் இந்த பங்களா வீட்டை வாங்கினேன். அப்போது புரோக்கருக்கு கமிஷன் ஒரு சதவீதம் என பேசி அதற்கான தொகை ரூ.22 லட்சம் கொடுத்து விட்டேன். அனால் இப்போது இரண்டு சதவீதம்  புரோக்கர் கமிஷன் என கூறி மேலும் ரூ.22 லட்சம் கேட்கிறார். இதற்காக என்னை தொந்தரவு செய்கிறார். இதுகுறித்தும் போலீசில் தெளிவு படுத்தி உள்ளதாக கூறியுள்ளர் கங்கனா.