நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் எத்தனையோ தத்துப்பிள்ளைகளில் ஒருவனான நான், எனது நடிப்பின் தந்தைக்கு வணக்கம்... என்று நடிகர் கமல் ஹாசன், கூறியுள்ளார்.

சிவாஜி கணேசன் இளமை முதல் நடிப்பின் மீது கொண்ட காதல் காரணமாக சிறுவனாக இருக்கும்போதே பல மேடை நாடகங்களில் நடித்து வந்தார். அப்போதே தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியும் வந்தார். முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடனும் சிவாஜி கணேசன் பணியாற்றியுள்ளார். 

சிறந்த நடிப்பு, தெளிவான உச்சரிப்பு, கம்பீரமான பேச்சால் தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாது இந்திய ரசிகர்களையும் தன் கட்டுக்குள் வைத்திருந்த நடிகர் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் அவரது திருவுறுவ சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் சிவாஜி கணேசனின் குடும்பத்தார் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடனும் சிவாஜி கணேசன் பணியாற்றியுள்ளார். இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசார் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்பை கண்டு வியந்த பெரியார், அவரை சிவாஜி என அழைத்தார். அன்று முதல் கணேசன், சிவாஜி கணேசன் என்று அழைக்கப்பட்டார். திரையுலகிற்கு நித்தம் நித்தம் புதுமுகங்கள் வந்து கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில், எங்களுக்கு சிவாஜி ஒரு பயிற்சி புத்தகம் என்றே பல்வேறு நடிகர்களும் கூறி வருகின்றனர். 

இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல் ஹாசன், நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார். அதில், இன்று ஐயா நடிகர் திலகத்தின் பிறந்தநாள். அவரின் எத்தனையோ தத்துப் பிள்ளைகளில் ஒருவனாய்... என் நடிப்பின் தந்தைக்கு வணக்கம் என்று கமல் ஹாசன் பதிவிட்டுள்ளார்.