சங்கர் இயக்கத்தில், கமல் ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் 
நடத்தப்பட உள்ளதாகவும், அதற்கான லொகேஷன் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தேவர் மகன் படத்தின் 2 ஆம் பாகத்தில் நடித்து இயக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியன் 2 படத்துக்குப் 
பிறகு, தேவர் மகன் 2 படம் உருவாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது 
தெரியவில்லை. ஆனாலும், இது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தேவர் மகன் திரைப்படம், 1992 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தில் கமல் ஹாசன், சிவாஜி கணேசன், நாசர், 
ரேவதி, கவுதமி நடித்திருந்தனர். இந்த படத்துக்கும் தேசிய விரும் கிடைத்தது. தேவர் மகன் படம் இந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் 
செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.