பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ஏற்று செய்த சர்வாதிகாரி டாஸ்க்கினால், பல பேரின் வெறுப்புக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கிறார் ஐஸ்வர்யா. இதில் தான் யாரை எல்லாம் பழி வாங்க வேண்டும் என நினைத்தாரோ அத்தனை பேரையும் கொஞ்சம் அதிகமாகவே பழிவாங்கினார் ஐஸ்வர்யா.

ஆனால் கடைசியில் எல்லாம் உங்க நன்மைக்காகதான் செய்தேன். லக்ஸரி பட்ஜெட்டுக்காகதான் செய்தேன். என கூறி சரண்டராகி இருக்கும் அவரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள்.

நேற்று கூட பிக் பாஸ் வீட்டினுள் வந்த சதீஷ் ஐஸ்வர்யாவிடம் இது குறித்து பேச, அப்செட் ஆகி விட்டார் ஐஸ்வர்யா. தொடர்ந்து சக போட்டியாளர்கள் அவரை சமாதனப்படுத்தினர். தற்போது இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான லேட்டஸ்ட் பிரமோ வெளியாகி இருக்கிறது.

😎 #பிக்பாஸ் - இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/O6BlgSzeaM

— Vijay Television (@vijaytelevision) August 4, 2018

அதில் கமல் முன்னிலையில் மீண்டும் இந்த சர்வாதிகாரி டாஸ்க் குறித்து விவாதிக்கப்படுகிறது. அப்போது சென்றாயனுடன் சண்டை போடும் ஐஸ்வர்யா நான் கமல் சாருக்காக தான் பொறுத்து போகிறேன் என கூறி ஸ்கோர் செய்ய பார்த்தார்.

அப்போது பேசிய கமல் எனக்காக யாரும் பொறுத்து கொள்ள வேண்டாம் என கூறினார். தொடர்ந்து ஐஸ்வர்யா அதை கூட கவனிக்காமல் சென்றாயனிடம் சண்டை போடவும், சர்வாதிகாரி டாஸ்க் முடிஞ்சிடுச்சு. இப்போ ஐஸ்வர்யாவா மாறுங்க என அறிவுரை கூறினார்.