பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு மாதத்தை கடந்து விட்ட போதிலும் இந்த நிகழ்ச்சியில் யாரும் உண்மையான முகத்தை வெளிக்காட்டாமல் இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். இதனால் எப்போதும் அமைதியாகவே இருக்கும் சிலரை குறிவைத்து இந்த வீட்டை விட்டு அனுப்புதாக வாரம் தோறும் ஓட்டு போடும் ரசிகர்கள் கூறுகிறார்கள்.  

வாரத்தில் ஐந்து நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி கலகலப்பாக செல்லவில்லை என்றாலும், கமல் ஹாசன் கலந்து கொள்ளும் சனி, ஞாயிரு ஆகிய இரு தினங்கள் ரசிக்கும் படி இருக்கும். 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், கமல்ஹாசன் கையில் இரண்டு பொம்மைகளை வைத்துக்கொண்டு இதில் ஜால்ரா யார் என பொன்னம்பலத்திடம் கேள்வி கேட்க அவர் அத்தனை பேரின் முன்பும் மும்தாஜ் தான் என சொல்கிறார். சென்ர்யானும் அவங்க தான் என கூறுகிறார். மகதிடம் இந்த கேள்வி எழுப்பும் போது 'ஏன் என்னை தர்ம சங்கடத்தில் மாட்டி விடுகிறீர்கள் என கேட்கிறார்'

எனினும் பொன்னம்பலத்தில் பதிலை கேட்டதுமே... மும்தாஜ் கடுப்பாகிறார். பின் இதே கேள்வியை மும்தாஜிடம் கேட்க அவர் வைஷ்ணவி தான் என சொல்ல அவரோ ஜால்ரா என்றால் அர்த்தம் என்ன கமலிடம் கேட்க அவர் ஜிஞ்சா ஜிஞ்சா என பாடுகிறார்.

உண்மையில் யார் ஜால்ரா... இன்று இரவு தெரியவரும்..!