கலாபவன் மணியின் மகள் ஸ்ரீலக்ஷ்மியின் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பற்றிய தகவல்...! உருக்கமான கூறிய சகோதரர்...!
தமிழ் சினிமாவில், குணசித்திர வேடங்களில் வித்தியாசமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் மலையாள நடிகர் கலாபவன் மணி.
இவர் நடிப்பில் வெளியன 'ஜெமினி', 'ஜேஜே', 'குத்து' ஆகிய படங்கள் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வரும் திரைப்படங்களாக உள்ளது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'ரோபோ' படத்திலும் நடித்து அசத்தியிருப்பார்.
இவர் 2016ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மேலும் இவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, வழக்குகள் நடந்து வருகிறது.
இந்த நேரத்தில் கலாபவன் மணியின் மகள் ஸ்ரீலக்ஷ்மியின் 12ம் வகுப்பு மதிப்பெண் குறித்த தகவலை கலாபவன் மணியின் சகோதரர் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், மணிக்கு அவரது மகளை மிகவும் பிடிக்கும். 10ம் வகுப்பில் அவள் நிறைய மதிப்பெண் எடுத்ததால் காரை பரிசாக கொடுத்தார். இப்போது ஸ்ரீலஷ்மி 12ம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளார். மகளை ஒரு மருத்துவராக ஆக்க வேண்டும் என்பது அவரது ஆசை, மருத்துவமனை கட்டவும் ஆசைப்பட்டார் என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், இப்போது அவரது மகள் 10, மற்றும் 12 படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டார். மணியை போல் ஸ்ரீலக்ஷமியும் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டு வளரவேண்டும் என்று வாழ்த்துவதாக பதிவு செய்துள்ளார்.