தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தற்போது நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக,இந்த படத்தின் ரிலீஸ் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனவே கொரோனா பரபரப்பு அடங்கிய பிறகே... இந்த படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் மற்ற தகவல்களை வெளியிடுவார்கள்.

இந்நிலையில் தற்போது தளபதி 65 வது படம் குறித்த , தகவல்கள் வெளியாகி வருகிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், நடிக்க உள்ளதாக கூறப்படும் இந்த படதின் கதையை எழுதும் பணியில் தற்போது எ.ஆர்.முருகதாஸ் பிஸியாக உள்ளாராம்.


போன் மூலமாகவே நாயகி தேர்வு போன்றவை நடப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை காஜல் அகர்வாலிடமும், நடிகை பூஜா ஹெட்டேவிடமும் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு உள்ளதாம்.

ஏற்கனவே சூர்யாவின் அருவா படத்தில் நடிப்பதாக வெளியான தகவலுக்கு, நடிகை பூஜா விளக்கம் கொடுத்தபோது, இரண்டு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளதாகவும், ஆனால் தற்போது வரை எந்த படத்திலும் தான் கமிட் ஆகவில்லை என கூறியிருந்தார். 


அதே நேரத்தில் இந்த வருடம் தமிழ் படத்தில் நடிப்பேன் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை காஜல் அகர்வால் ஏற்கனவே விஜய்யுடன் ஜில்லா, துப்பாக்கி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்துள்ளார் . ஒருவேளை இந்த இரண்டு நாயகிகளும் விஜய்க்கு ஜோடியாக தளபதி 65 படத்தில் நடிப்பார்களா? அல்லது ஏதேனும் மாற்றங்கள் வருமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.