பட வாய்ப்பு பெற்று தருவதாக, தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டு ஏமாற்றியவர்கள் பெயர்களை நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்ட போது இவர் பலர் சமூக வலைத்தளத்தில் மிகவும் மோசமாக விமர்சித்து கருத்து வெளியிட்டனர்.

இதற்கு ஸ்ரீரெட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு ரசிகர்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு ட்விட் போட்டார் அதில் "நான் வெளியிட்டு வரும் பட்டியலில் உள்ள பிரபலங்கள் மிகவும் குறைவு தான் என்று கூறி, வரிசையாக நடிகை த்ரிஷா, நயன்தாரா, காஜல் அகர்வால் , சமந்தா உள்ளிட்ட நடிகைகளின் பெயர்களை கூறி இவர்கள் பட்டியலில் இருப்பவர்கள் தான் அதிகம் என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்". 

ஆனால் இதுவரை இவருடைய இந்த புகாருக்கு எந்த நடிகையும், இவருக்கு எதிராக பதில் பேசவில்லை.

இந்நிலையில் தற்போது இந்த சர்ச்சை பற்றி பேசியுள்ள நடிகை காஜல் அகர்வால் பல வருடங்களாக நான் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறேன் ஆனால்  இதுபோல எந்த சர்ச்சையையும்  எதிர்கொள்ளவில்லை. சினிமா துறையில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது இருக்கிறதா, இல்லையா என்பது கூட எனக்கு தெரியாது" என கூறியுள்ளார்.

ஏற்கனவே தெலுங்கு பிரபலங்கள் பற்றி, ஸ்ரீரெட்டி புகார் கூறியபோது, நடிகை ரகுல் ப்ரீத் சிங் இதேபோல ஒரு கருத்தை கூறினார். அப்போது நடிகை ஸ்ரீரெட்டி மிகவும் கோபமாக அவருக்கு பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், காஜல் அகர்வால் கூறியுள்ள கருத்துக்கும் விரையில் ஏதேனும் பேட்டியில் இவர் சரியான பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.