நடிகர் ஜெயம் ரவி, வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இதனால் இவரின் படங்களுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான 'அடங்கமறு' படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் விரைவில் இந்த படம் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் படக்குழுவினர் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியின், அடுத்த படத்தில் நடிக்க தயாராகி விட்டார். இது ஆக்சன் கதையாக இருக்கலாம் என்றும் அறிமுக இயக்குனர் இந்த படத்தை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக முதல் முறையாக அஜித், விஜய் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள காஜல் அகர்வால் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே ஜெயம் ரவி நடித்து வெளியான 'போகன்' படத்தில் காஜல் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் அது ஒரு சில காரணங்களால் முடியாமல் போனது. எனினும் இந்தபடத்தில் ஜெயம் ரவி காஜலுடன் ஜோடி போடுவார் என கூறப்படுகிறது.