சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ், மற்றும் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால வெங்கட்ராவ் ஆகியோர் மகேஷ் பாபு மற்றும் மூன்று முன்னணி நடிகைகளை வைத்து தயாரித்திருக்கும் திரைப்படம் “ அனிருத்  “

ஏற்கனவே பத்ரகாளி பிலிம்ஸ் , பிரபாஸ்சை வைத்து பாகுபலி, இது தாண்டா போலீஸ், மகதீரா, புருஸ்லீ, எவண்டா உட்பட ஏராளமான வெற்றிப்படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறது.   

இந்நிலையில் தெலுங்கில் பிரம்மோற்சவம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை தமிழில் “ அனிருத் “ என்ற பெயரில் தயாரித்து வெளியிட உள்ளது.      

இந்த படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக காஜல்அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ்ரிஷி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.