நடிகர் சிபு மீது அவ்வப்போது சில சர்ச்சை கிளம்பினாலும் இப்போது புது வித பிரச்சனை அவருக்கு நேர்ந்து உள்ளது.

நடிகர் சிம்பு மீது சில புகார்கள் உள்ளது. அதில் ஒப்பந்தம் செய்யப்படும் படத்தில் சரியான நேரத்தில் வந்து  நடித்து கொடுக்க மாட்டார்.. தேதியை அடிக்கடி மாற்றி கால்சீட் கொடுப்பது.. என தொடரலாம்.

இதற்கிடையில், பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தொடங்க இருந்த புதிய  படத்தில்  நடிப்பதற்காக நடிகர் சிம்புவிற்கு முன்பணமாக 50 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவர் ஒப்பந்தம்படி  படத்தை நடித்துக் கொடுக்காமல் இருந்துள்ளார்.

பல முறை  கேட்டுப் பார்த்தும் நடிகர் சிம்புவிடம் இருந்து சரியான பதில் எதுவும் கிடைக்காத  காரணத்தினால், சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிம்பு மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி, நடிகர் சிம்பு சொத்தை ஜப்தி செய்ய  ஆணை பிறப்பித்து உள்ளது. அதில் வரும் அக்டோபர் 31 ஆம் தேதிககுள் கொடுத்த 50 லட்ச ரூபாயை திருப்பி தர வேண்டும் என்றும், அப்படி தரவில்லை என்றால் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும் என்றும் உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது