ஜெயலலிதாவுக்காக மீண்டும் திரண்ட மக்கள்... கருப்புச் சட்டையில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர்... (வீடியோ)

jayalalitha first year memoriyal
First Published Dec 5, 2017, 4:29 PM IST | Last Updated Sep 19, 2018, 3:18 AM IST



தமிழக அரசியல் சாம்ராஜ்யத்தில், தன்னுடைய பெயரை மக்கள் மனதில் நீங்கா இடம்பெறும் வகையில் ஆழப் பதித்துச் சென்றவர்தான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. சிறந்த பெண்மணியாக இருந்து, தமிழ் மக்களுக்கு சேவை செய்த இவரது இறப்பு மக்கள் மத்தியில் மிகப் பெரிய அனுதாபத்தை ஏற்படுத்தியது மட்டுமல்ல, கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது!

தற்போது வரை பலர் இவருடைய மரணத்திற்கான உண்மை நிலை தெரிய வேண்டும் எனக் கூறி வருகின்றனர்  என்றாலும், அவர் இறந்து ஒரு வருடம் ஆகியும் இறப்பின் மர்ம முடிச்சுகள் இன்னமும் அவிழாமல் இருப்பது வேதனை.

இந்நிலையில் இன்று, அவரது முதலாம் ஆண்டு அஞ்சலி அனுசரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் இருந்து வந்து பொது மக்கள் பலர் ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும், முதலமைச்சர் பழனிசாமி , துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சட்ட மன்ற உறுபினர்கள் என அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து பேரணியாக நடந்து சென்று ஜெயலலிதாவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தினர்.

அந்தக் கட்சிகள் இதோ..

 

Video Top Stories