Asianet News TamilAsianet News Tamil

வசூலை வாரிக்குவிக்கும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி! முதல் படமே ரூ.100 கோடி வசூலை தாண்டியது!

Janhvi Kapoors Dhadak crosses Rs 100 crore
Janhvi Kapoors Dhadak crosses Rs 100 crore
Author
First Published Aug 2, 2018, 5:03 PM IST


மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிப்பில் வெளிவந்துள்ள 'தடக்' உலகம் முழுக்க சக்கைபோடு போடுகிறதாம். அதன் முதல்கட்ட வசூல் இன்று ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளதாக செய்திகள் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறிமுக நட்சத்திரங்கள் நடிப்பில் வெளிவந்துள்ள 'தடக்' உலக அளவில் பெரிய  அளவுக்கு ரீச் ஆகி, பாலிவுட்டில் ஹாட் ஆப் டாபிக் ஆகியுள்ளது. இது குறித்து பேசிய ஜான்வி, " அறிமுகப்படம் என்பதால் கொஞ்சம் படபடப்பு இருந்தது.Janhvi Kapoors Dhadak crosses Rs 100 crore
 
பத்திரிகை உலகத்தின் கவனம் முழுக்க என்மீதும் தடக் மீதுமே இருந்தது. எப்படி நடித்து இருக்கேன், படத்திற்கு வரவேற்பு எப்படி கிடைத்துள்ளது என்று எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. இந்த நிலையில் நல்ல ரிசல்ட், ரசிகர்கள் மத்தியில் பெரிய ரீச் கிடைத்துள்ளது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது." என்று தெரிவித்துள்ளார். 'தடக்' படத்தில் ஜான்வியின் ஜோடியாக நடித்து இருப்பவர் இஷான் கட்டர்.  இந்தப்படம் மராத்தியில் வெளியான ' சாய்ரட்' படத்தின் ஹிந்தி ரீமேக். ஆணவக் கொலைக்கு எதிராக வெளிவந்து மராத்தி மொழியில் பரபரப்பினை கிளப்பியது.   Janhvi Kapoors Dhadak crosses Rs 100 crore
 
அதன் தாக்கம் இந்தப் படம் இப்போது ஹிந்தியில் எதிரொலித்துள்ளது. தர்மா புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் கரண் ஜோஹர் தயாரித்த தடக் படத்தை ஷசாங்க் கைதான் இயக்கியுள்ளார். படத்தில் ஸ்ரீதேவியை விட ரொம்பவே க்யூட்டாக இருக்கிறார் ஜான்வி என்றும், ஜான்விக்கு பெரிய எதிர்காலம் இருப்பதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, நாயகனாக அறிமுகமாகும் இஷான் கட்டர்தான் பாலிவுட்டின் அடுத்த சாக்லேட் பாய் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.Janhvi Kapoors Dhadak crosses Rs 100 crore
 
'சாய்ரட்' படம் மராத்தியில் பெரும் வெற்றி பெற்றதையடுத்து தொடர்ந்து கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. இப்போது ஹிந்தியில் வந்துள்ளது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கிலும் இந்தப் படத்தைத் தயாரிக்க பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஜூலை 20ம் தேதி வெளியான தடக் முதல் வாரத்திலேயே, அதன் வசூல்  ரூ.33.76 கோடியைத் தொட்டது. இப்போது உலக அளவில் ரூ.100 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸை எகிற வைத்துள்ளது. 'தடக்'  தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தனது டிவிட்டர் பக்கத்தில், " அறிமுக நடிகர்கள் நடித்த தடக் உலக ரசிகர்களின் மனதை கவர்ந்துவிட்டது. வசூல் ரூ.100 கோடியை தாண்டியுள்ளது. ஜான்விக்கும்  இஷானுக்கும் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios