பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போட்டியாளர்களில் யாருக்குமே இந்த சீசனில் ஓவியா அளவிற்கு புகழ் கிடைக்கவில்லை. இந்த சீசனில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்கள் பெரும்பாலும் போலித்தன்மையுடன் நடந்து கொண்டதால், மக்களின் வெறுப்பை சம்பாதித்தவர்கள் தான் இம்முறை அதிகம். 

ஆனால் ஜனனி மும்தாஜ் போன்ற சிலருக்கு மட்டும் மக்கள் மனதில் நல்ல இடம் கிடைத்திருக்கிறது. அதிலும் ஜனனிக்கு ஆர்மி எல்லாம் ஆரம்பித்திருக்கின்றனர் அவரின் ரசிகர்கள். சக போட்டியாளர்களால் விஷ பாட்டில் என்று அழைக்கப்பட்டாலும் அவரின் ரசிகர்கள் அவரை கொண்டாடத்தான் செய்கின்றனர். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எவிக்ஷன் லிஸ்டுக்கு இவர் பல முறை வந்திருக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவரது ரசிகர்களால் காப்பாற்றப்பட்டும் வருகிறார்.
 இந்த முறை கூட பிக் பாஸ் எவிக்ஷன் லிஸ்டில் இவர் பெயரும் வந்திருக்கிறது. ஆனால் பாலஜி இவருக்காக மொட்டை அடித்து கொண்டு , ஜனனியை எவிக்ஷன் லிஸ்டில் இருந்து காப்பாற்றி இருக்கிறார். 

தன்னுடைய காதலன் பணத்தை காரணம் காட்டி தன் காதலை உதறி சென்ற காரணத்தால் , சினிமா துறையில் நடித்து ஜெயித்து தன் காதலனை விட அதிகம் சம்பாதித்து காட்ட வேண்டும். என்ற வெறியில் இருந்த ஜனனிக்கு, ஆரம்பமே ஒன்றும் அசத்தலாக அமைந்துவிடவில்லை. பல போராட்டங்களுக்கு பிறகு தான் இன்று இந்த இடத்தை பிடித்திருக்கிறார் ஜனனி. 

ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த ஜனனிக்கு முதல் முதலாக கிடைத்த சம்பளம் 2500 ரூபாய் தானாம். அந்த சம்பளத்தை கூட தன் வீட்டில் வேலை பார்க்கும் அம்மாவின் மகனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட கொடுத்துவிட்டாராம். முதல் சம்பளத்தை பிறருக்கு உதவ கொடுத்ததனால் தானோ என்னவோ, இன்று இந்த அளவிற்கு திரைத்துறையில் உயர்ந்திருக்கிறார் ஜனனி. இதனால் ரசிகர்கள் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.