தமிழ் சினிமா இதுவரை காணாத பெரும்பொருட்செலவில், மன்னர் ராஜராஜ சோழனின் வாழ்க்கையை மூன்று அல்லது நான்கு பாகங்களாக இயக்கவிருக்கிறார் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான எஸ்.பி.ஜனநாதன்.

2003-ல் ஷாமை வைத்து ‘இயற்கை’ படத்தின் மூலம் அறிமுகமான ’தங்கமான சோம்பேறி’ இயக்குநர் ஜனநாதன், தனக்கு நல்ல மார்க்கெட் இருந்தபோதும்,  கடந்த 15 ஆண்டுகளில் ‘இயற்கை’, ஈ’. ‘பேராண்மை’ ’புறம்போக்கு என்னும் பொதுவுடமை’ ஆகிய நான்கே படங்களை மட்டுமே இயக்கியுள்ளார்.

 

2015-ல் வெளியான ‘புறம்போக்கு’ படத்துக்குப்பின் நீண்ட ஓய்விலிருந்த ஜனநாதன் தனது துயில்களைந்து இதுவரை தமிழ்சினிமா காணாத வகையில் மன்னர் ராஜராஜ சோழனின் கதையை இயக்க களம் இறங்கிவிட்டார். இதற்காக சுமார் ஆறு மாதங்களுக்கும் மேல் ராஜராஜசோழன் தொடர்பாக வெளிவந்த அத்தனை புத்தகங்களையும் திரட்டி வாசிப்பது, மற்றும் கள ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறாராம். 

இந்த மெகா பட்ஜெட் படத்தின் தயாரிப்பாளர், ஏற்கனவெ ராஜராஜசோழனாக சிவாஜி நடித்திருப்பதால் அவரது நடிப்புக்கு சவால் விடக்கூடிய ஹீரோ மற்ற தொழில் நுட்பக்கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு தீபாவளியை ஒட்டி வெளியாகலாம். ஜனநாதனின் உதவி இயக்குநர்கள் வட்டாரத்தில் விசாரித்த வகையில் ஜனநாதனின் முதல் சாய்ஸாக கமல் இருக்கக்கூடும் என்று கிசுகிசுக்கிறார்கள்.