நடிகை ஷாலு ஷம்மு ஆண் நண்பருடன் அரைகுறை ஆடையில் மீண்டும் பப்பில் கெட்ட ஆட்டம் போடும் வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகும். வருத்தப்படாத வாலிபர் சங்கம், சகலகலா வல்லவன், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்திருப்பவர் நடிகை ஷாலு ஷம்மு.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஷாலு ஷம்மு, அண்மைக்காலமாக படு கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு உசுப்பேற்றி வருகிறார். குறிப்பாக பப்புகளில் அவர் போடும் கெட்ட ஆட்டம் ரசிகர்களை கடுப்பாக்கி வருகிறது. அரைகுறை ஆடையில் ஷாலு ஷம்மு போடும் கெட்ட ஆட்டத்தை பார்க்கும் நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத ஷாலு, நாளுக்கு நாள் கவர்ச்சியில் தாராளம் காட்டி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தான் மலேசியாவில் உள்ள முருகன் கோயிலும் முன் கவர்ச்சியாக உடையணிந்து ஒய்யார நடை போட்ட அவரது வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  ‘’ஏம்மா... பின்னாடி நிற்பது என்ன சரவணா ஸ்டோர் லெஜண்ட் நடிகர் சரவணனா? அவர் கடவுள் சரவணன் ம்மா... கொஞ்சமும் கடவுள் என்ற பக்தி பெண்களுக்கு வேண்டாமா’’என நெட்டிசன்கள் கடுப்பாகி வருகின்றனர்.