கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து தற்போது தமிழ் மட்டும் இன்றி, மலையாளம், இந்தியிலும் கலக்கி வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தற்போது இவர் முதல்முறையாக நடித்து வரும் பாலிவுட் படமானது "டாடி" படத்தின் ப்ரோமோஷன்  நிகழ்ச்சி, மும்பையில் நடந்தது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  அவரிடம் திரைப்படங்களில் நடிக்க நடிகை அட்ஜஸ்மென்ட் பண்ண வேண்டும் என்று கூறப்படுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இது குறித்து பேசிய அவர் நடிகைகளை ஜெயிக்க வைப்பதற்கு, பாலியல் ரீதியாக துன்புறுத்துவது மிகவும் கேவலமான செயல். இருப்பினும் ஒரு சில உப்புமா படங்களுக்கு கூட அட்ஜஸ்ட்மென்ட் வேண்டும் என கேட்பவர்களும் உண்டு.

மேலும் இதனை அட்ஜஸ்ட்மென்ட், காண்ட்ராக்ட், அக்ரிமெண்ட் என பல பெயர்களின் கூறி கேட்பார்கள் என வெளிப்படையாக பேசியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.