Asianet News TamilAsianet News Tamil

கவர்ச்சி நடிகைகளை வம்பிழுத்து பார்ன் ஆன்தம் வெளியிட்ட படக்குழு..!

iruttu araiyil murattu kuthu movie team release porn anthem
iruttu araiyil murattu kuthu movie team release porn anthem
Author
First Published Jan 8, 2018, 3:37 PM IST


சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா நடித்து வரும் படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. அடல்ட் காமெடி படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.

'ஹரஹர மஹா தேவகி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் கௌதம்கார்த்திக்குடன் இணைந்திருக்கிறார் சந்தோஷ் பி ஜெயக்குமார். 'ஹரஹர மஹாதேவகியை' தவிர 2017ல் இவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 'இவன் தந்திரன்' படம் மட்டும் ரசிகர்களிடம் ஓரளவு பேசப்பட்ட படமாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது பார்ட்டி பார்ன் ஆன்தம் ஒன்றை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். பக்தாஸின் காதுகளில் இன்பத்தேன் வந்து பாயுற மாதிரி பாட்டை உருவாக்கியிருக்கிறார்கள்.பாடல் முழுவதும் இரட்டை அர்த்த வசனங்களாம். குடும்பத்தோடு இந்தப் பாடலைப் பார்க்க முடியாது.

ஹரஹர மஹாதேவகி படத்திற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதேபோல இப்போது வந்திருக்கும் இந்த பாடலுக்கும் நிச்சயம் எதிர்ப்பு கிளம்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு இரட்டை அர்த்த வசனங்களை அள்ளித் தெளித்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

மேலும் இந்தப் பாடலில் சுசி லீக்ஸ், சன்னி லியோன்,ஷகிலா, சில்க்ஸ்மிதா என அனைத்து கவர்ச்சி நடிகைகளையும்  வம்பிழுத்திருக்கிறார்கள். படத்தின் பாடல் வீடியோவைப்  பார்த்தால் உங்களுக்கே புரியும்.

Follow Us:
Download App:
  • android
  • ios