'மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை இந்துஜா. பக்கா தமிழ் பெண்ணான இவர், 'மெர்குரி', 'பூமராங்', 'மகாமுனி' உள்ளிட்ட பல படங்களில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். 

கடைசியாக, 'தளபதி' விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'பிகில்' படத்தில் வேம்பு என்ற கேரக்டரில் கால்பந்து வீராங்கனையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். 


இருந்தாலும், இந்துஜாவால் தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தைப் பிடிக்க முடியவில்லை. தற்போது, விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கும் 'காக்கி' படம் மட்டுமே அவர் கைவசம் உள்ளது. 

இதனால், சென்னையில் நடைபெறும் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை பொழுது போக்காகக் கொண்டுள்ள இந்துஜா, அங்கு எடுக்கப்படும் தனது அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். 


அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற மெட்ராஸ் பிரைடல் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் இந்துஜா கலந்து கொண்டார். இதில், வார்ட்ரோப் ஸ்டைலில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடையில், தலையில் கிரீடத்துடன் மகாராணி போல் ஒய்யார நடை நடந்து வந்து காண்போரை சொக்கவைத்தார். 

இந்த புகைப்படங்களை,  தற்போது இந்துஜா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்துஜா..

இந்துஜா.. சொக்கவைக்கும் இந்துஜா! என உருகும் அளவுக்கு விதவிதமான போஸ்களில் இந்துஜா அசரடிக்கும் இந்த புகைப்படங்கள், லைக்குளை குவித்து வருகிறது.