கன்னியாகுமரி டூ காஷ்மீர் "அட்ச்சி தூக்கு" தான்... கேக் வெட்டி கொண்டாடிய ராணுவ வீரர்கள்!
சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மதுரையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல் ஆட்டம் போட வைக்கும்படியாக அட்ச்சி தூக்கு உருவாகியுள்ளது.

"அட்ச்சி தூக்கு" பாடல் வீடியோ வெளியான 16 மணிநேரத்தில் 43 லட்சம் பேர் பார்த்துள்ளனர். தல ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கும் இந்த நிலையில், ராணுவத்தில் இருக்கும் தல ரசிகர் ஒருவர் "அட்ச்சி தூக்கு" பாடலை கொண்டாடியபோது எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. காஷ்மீரில் இருந்து வெளியிட்ட அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.