இயகுநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான இந்தியன் திரைப்படத்தின்,  2 ஆம் பாகம் உருவாவதை ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது.

மேலும் 'இந்தியன் 2'  திரைப்படம் கைவிடப்பட்டதாக சமூக தளங்களில் பரவிய தகவலுக்கு படக்குழு மறுப்பு தெரிவித்தது. இதை தொடர்ந்து கமல் , ‘விஸ்வரூபம் 2’ படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வந்தார் அதே போல் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இந்நிலையில் 2.0 கிராபிக் பணிகளுடன் ‘இந்தியன் 2’ படத்தின் பணிகளையும் தற்போது துவங்கியுள்ளார் ஷங்கர். இதற்கு அடித்தளம் போடும் வகையில், படத்தின் லோகேஷன் பார்க்கும் பணியை தொடங்கியுள்ளார். ஷங்கர் மற்றும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் லோகேஷன் பார்க்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் கமலை இந்தியனாக பார்க்க வாய்ப்பு உள்ளது.