ஊர் உலகமெல்லாம் தேர்தல் கருத்துக்கணிப்புகளில் படு பிசியாக உள்ள நிலையில் வட இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இந்தியாவின் நம்பிக்கையான மனிதர்கள் யார் என்பது குறித்து ஒரு சர்வே எடுத்துள்ளது. ரஜினி,விஜய் இடம்பெற்றுள்ள இப்பட்டியலில் அஜீத் இடம்பெறவில்லை.

டி.ஆர்.ஏ என்ற வட இந்திய தனியார் அமைப்பு 16 நகரங்களில் ஆய்வு நடத்தி ’அதிக நம்பகத்தன்மை கொண்ட பிரபலங்கள் 2019’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் மக்கள் மத்தியில் அதிகம் நம்பகத்தன்மை கொண்ட பிரபலங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.இந்த பட்டியலில் அகில இந்திய அளவில் அமிதாப் பச்சன் முதல் இடத்திலும் ஆமீர்கான், சல்மான் கான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். அக்‌‌ஷய் குமார், ஷாருக்கான் முறையே 4-வது, 5-வது இடங்களில் இருக்கின்றனர்.

நடிகைகளில் தீபிகா படுகோனே முதல் இடத்திலும் காத்ரீனா கைப், மாதுரி தீட்ஷித் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஐஸ்வர்யா ராய்க்கு 6-வது இடம் கிடைத்துள்ளது. அவருக்கு பின் பிரியங்கா சோப்ரா இடம்பெற்றுள்ளார்.

தென்னிந்திய நம்பிக்கை மனிதர்கள் பட்டியலில் ரஜினிகாந்த் முதல் இடத்திலும், விஜய் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். மூன்றாம் இடத்தில் விக்ரம் உள்ளார். ஆனால் இப்பட்டியலில் அவர்களை விட செல்வாக்கான மனிதர் என்று கருதப்படும் அஜீத் முதல் பத்து இடங்களில் கூட இடம் பெறவில்லை.கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி முதல் இடத்திலும் சச்சின் தெண்டுல்கர் 2-வது இடத்திலும் உள்ளனர். ரோகித் சர்மாவுக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.  அஜீத் போல இன்னொரு ’தல’யான  தோனியின் பெயரும் இப்பட்டியலில் இடம் பெறவில்லை.