40 வருடமாக சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையில் இருந்தும் இதுவரை எனக்கு ஒருத்தர் கூட செக்ஸ் தொல்லை குடுத்ததில்லை’ என்று அவரது ஆண் நண்பர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளிக்கிறார்  தேர்ந்த நடிகையான குஷ்பு.

’’சின்மயி விவகாரம் குறித்து தேவையான அளவுக்கு பேசியாகிவிட்டது. அது குறித்த கேள்வி முடிந்தவுடன்  ‘மேடம் உங்களுக்கு மிடு’ அனுபவம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். என்னுடைய பதில் உங்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தான் கொடுக்கும். வேறுவழி இல்லை. ஆனால் உண்மை அதுதான்.

குஷ்பு போல்டானவர். முகத்துக்கு நேரே பதிலடி கொடுப்பவர் என அனைவருக்குமே தெரியும் என்பதால் என் 40 ஆண்டு கால அனுபவத்தில் என்னிடம் யாருமே தவறாக நடக்க முயன்றதில்லை.

இப்போது மிடு’ விவகாரம் நாடெங்கும் தீப்பிடித்திருக்கும் நிலையில், அதில் சம்பந்தப்படாத சில பெண்கள் விவாதிக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் அதன் வீர்யத்தை நீர்த்துப்போகச்செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிப்போய் தங்கள் வேலையை மட்டும் பார்க்கவேண்டும்’’ என்று சற்று காட்டமாக கூறுகிறார் குஷ்பு.

திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் குறித்து மிகவும் துணிச்சலாகப் பேசியவர் என்பதால் குஷ்புவை நெருங்க அவருடன் நடித்த கதாநாயகர்கள் பயந்து அஞ்சியிருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.