Asianet News TamilAsianet News Tamil

பிரபல இந்தி நடிகை திடீர் மரணம்…. கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர் !!

hindi actress ridha baduri expired
hindi actress ridha baduri expired
Author
First Published Jul 18, 2018, 7:50 AM IST


பிரபல இந்தி நடிகை ரிதா பாதுரி உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இவர் நடிகர் கமலஹாசன் மலையாளத் திரையுலகில் அறிமுகமான கன்னியாகுமரி திரைப்படத்தில்  அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் களத்தூர் கண்ணம்மா படத்தில் சிறுவனாக அறிமுகமானார். இதையடுத்து கமல்ஹாசன் மலையாளத்தில் கதாநாயகனாக அறிமுகமான படம் கன்னியாகுமரி.

சேதுமாதவன் இயக்கி 1974–ல் வெளியான இந்த படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக ரிதா பாதுரி நடித்து இருந்தார்.  இது தவிர  1970–களில் வெளியான ராஜா, ஜூலி, தில்வில் பியார், வியார் உள்பட 70 படங்களில்  ரிதா பாதுரி நடித்து இருக்கிறார். சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். 

hindi actress ridha baduri expired

அதன்பிறகு அக்கா, அண்ணி  போன்ற கதாபாத்திரங்களில் துணை நடிகையாக வந்தார். ஹபி ஹான் ஹபி நா, கியா ஹேக்னா, தில் வில் பியார் வியா  போன்ற திரைப்படங்கள் இவர் நடிப்பில் வந்த முக்கிய படங்கள். குஜராத்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.  அண்மைக்காலமாக  இந்தி தொடர்களில் நடித்து வந்தார். 

hindi actress ridha baduri expired

மும்பையில் குடும்பத்தினருடன்  வசித்து வந்த  ரிதா பாதுரிக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரக பாதிப்பு பிரச்சினையும் இருந்தது. இதற்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் உடல் நிலை மோசமானது. இதையடுத்து அவர் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62. 

மரணம் அடைந்த ரிதா பாதுரி உடல் மும்பை அந்தேரியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்தி நடிகர்–நடிகைகள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios