13 வயதில் சித்தியாக நடித்த ஸ்ரீதேவி! பிறந்தநாள் பகிர்வு!

முதன்முறையாக இந்தியில் அறிமுகமான போது இந்தியில் பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டார் ஸ்ரீதேவி. நாஸ், ரேகா இருவரும் தான் ஸ்ரீதேவிக்கு டப்பிங் பேசியுள்ளனர். ஸ்ரீதேவி முதன்முறையாக டப்பிங் பேசி நடித்த இந்தி திரைப்படம் "சாந்தினி"

First Published Aug 13, 2018, 4:01 PM IST | Last Updated Sep 9, 2018, 7:15 PM IST

ஆகஸ்ட் 13, 1963 அன்று பிறந்த  நடிகை ஸ்ரீதேவியின் இயற்பெயர் ஸ்ரீ அம்மா யங்கார் அய்யப்பன்.

நான்கு வயதில் நடிக்க ஆரம்பித்த ஸ்ரீதேவி நடித்த முதல் திரைப்படம் "துணைவன்".

சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருதினை ஐந்து முறை பெற்றுள்ளார் ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவி நடிகையாக அறிமுகமான இந்தி திரைப்படம் "சொல்வ சவான்"

2013 ம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான "பத்மஸ்ரீ" விருது நடிகை ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டது.

நடிகை ஸ்ரீதேவி, ஸ்டிபன் ஸ்பீல்பெர்க்கின் "ஜுராசிக் பார்க்" திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒப்புதல் செய்யப்பட்டார். ஆனால், இந்தியில் மிகவும் பிஸியாக இருந்ததால் அந்த வாய்ப்பினை வேண்டாமென்று கூறிவிட்டார்.