Asianet News TamilAsianet News Tamil

’பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் ஒரு சீட் கூட கிடைக்காது’...பிரபல கவிஞரின் கருத்துக் கணிப்பு...

’’இன்னமும் 3 தினங்களில், இந்தியாவில் உள்ள மொத்த அழுக்கையும் போக்குகிறோமா அல்லது எல்லோரும் அழுக்காகிப் போகிறோமா என்பது தெரிய இருக்கிறது. தமிழனாக இருக்கக்கூடிய யாரும் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. ஏனென்றால், நிச்சயமாக தமிழ்நாட்டில் அவர்கள் ஒரு சீட்டைக்கூட வாங்க மாட்டார்கள்’’ என்று தன் பங்கிற்கு ஒரு எக்ஸிட் போல் கணிப்பை வெளியிடுகிறார் கவிஞர் யுகபாரதி.
 

gypsi audio release funtion
Author
Chennai, First Published May 20, 2019, 5:05 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

’’இன்னமும் 3 தினங்களில், இந்தியாவில் உள்ள மொத்த அழுக்கையும் போக்குகிறோமா அல்லது எல்லோரும் அழுக்காகிப் போகிறோமா என்பது தெரிய இருக்கிறது. தமிழனாக இருக்கக்கூடிய யாரும் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. ஏனென்றால், நிச்சயமாக தமிழ்நாட்டில் அவர்கள் ஒரு சீட்டைக்கூட வாங்க மாட்டார்கள்’’ என்று தன் பங்கிற்கு ஒரு எக்ஸிட் போல் கணிப்பை வெளியிடுகிறார் கவிஞர் யுகபாரதி.gypsi audio release funtion

ஒலிம்பியா மூவிஸ் சார்பாக எஸ்.அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜு முருகன் எழுத்து, இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்துள்ள படம் ஜிப்ஸி. இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், படக்குழுவினர் உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியீட்டு விழாவோடு, நிருபமா தத் எழுதிய "துணிவின் பாடகன் பாந்த் சிங்" என்ற ஒரு புத்தகமும் வெளியிடப்பட்டது.

துவக்கத்தில் விழாவில் இயக்குநர் கரு.பழனியப்பன்,”ராஜு முருகன் யுகபாரதிக்கு எப்படி ஒரு தம்பியோ, அதுபோல் என்னைப் போல பலபேருக்கு அவர் தம்பி. ஜீவா, இசையமைப்பாளர் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த தயாரிப்பாளர் அம்பேத்குமார் பெரிதாக ஜெயிக்க வேண்டும். அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர். ஒரு பையனுக்கு ஒரு மருத்துவ உதவி தேவைப்பட்டது. நான் தயங்கி கேட்டேன். ஆனால் அவர் அதை செய்து கொடுத்தார். நான் மருத்துவமனை போகும் முன்பே அவர் அங்கிருந்தார்.

முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் இப்படியான உதவிகளால் தான் இன்னும் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். மக்கள் மீது எப்படி ஈடுபாட்டோடு இருப்பாரோ அப்படித்தான் அவர் படங்களும் இருக்கும். ராஜு முருகன் அரசியல் பேசாமல் இருக்க மாட்டார், அதனால் அவரும் சட்டமன்றத்திற்குச் செல்ல வாழ்த்துகிறேன்" என்றார்.`gypsi audio release funtion

அடுத்து பேசிய நாயகன் ஜீவா “ ‘ஜிப்ஸி' எனக்கு பெரிய பயணம். என் வீட்டில் நான் ஜிப்ஸி மாதிரிதான் வாழ்ந்துட்டு இருப்பேன். என் மனைவி ஒரு பஞ்சாபி, அப்பா ராஜஸ்தானி, அம்மா தமிழ்நாட்டுக்காரர். இந்த மூவரையும் பேலன்ஸ் பண்ணி வாழ்ந்துட்டு இருக்கேன்.

'ஜிப்ஸி' படம் எனக்கு வந்தபோது ரொம்ப மகிழ்ந்தேன். ஜாதி, மொழி எல்லாம் கடந்து ரொம்ப நடுநிலையான படமாக இது அமைந்தது. 
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இப்படத்துக்காகப் பயணித்திருக்கிறேன். இப்படம் முடித்துவிட்டு வெளியே வேறொரு மனிதனாகத்தான் வந்தேன். இப்படத்தில் ஒரு சமத்துவம் இருக்கும்.gypsi audio release funtion

சினிமாவில் யார் வேண்டுமானாலும் பணிபுரியலாம். அனைவருமே திறமைகளை சினிமாவில் வெளிப்படுத்தலாம். இப்படத்தில் இயக்குநர் ராஜு முருகன் நடிகனாக எனக்கு நல்லதொரு தீனி கொடுத்திருக்கிறார். ஒரு நடிகர் நன்றாக நடித்திருக்கிறார் என்றால், அந்த இயக்குநருடைய எழுத்துதான் காரணம். அவருடைய எழுத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால், இன்று எழுத்தாளர்கள்தான் தேவை. இப்படத்தின் கதையைக் கேட்டவுடனே ரொம்ப எமோஷன் ஆகிவிட்டேன்’என்றார்.

அடுத்து பேசிய கவிஞர் யுகபாரதி “ஜீவா எவ்வளவோ கெட்டப் போட்டு பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், ஜீவா என்ற பெயருக்குத் தகுந்தாற் போல் இன்றுதான் சிவப்பு சட்டை அணிந்து வந்துள்ளார். நான் சிவப்பு சட்டை போட்டு வந்ததுக்கு முக்கியமான காரணம், நேற்று எக்ஸிட் போல் என்ற பெயரில் ஒன்று அறிவிச்சாங்க பாருங்க. அதிலிருந்து கறுப்புச் சட்டையிலிருந்து சிவப்புச் சட்டைக்கு மாறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என நினைக்கிறேன்.

அண்ணனாக, தம்பி ராஜு முருகனுக்கு நன்றி. அவன் தேசிய விருது வாங்கி இருக்கிறான், வாங்க இருக்கிறான் என்பதில் எல்லாம் மகிழ்ச்சியில்லை. அதை எல்லாம்விட பாந்த் சிங், செல்லப்பா போன்றவர்களை சினிமா மேடைகளில் மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறானே... அதற்காகத்தான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சந்தோஷ் நாராயணனின் இசைக்கு மிகப்பெரிய ரசிகன் நான். அவருடைய இசையில் எழுதுவதை மிகப்பெரிய கவுரவமாகவும் மகிழ்ச்சியாகவும் கருதுகிறேன்.gypsi audio release funtion

படப்பிடிப்பு நடைபெறும்போது, பலமுறை நானும், தயாரிப்பாளர் அம்பேத்குமாரும் பேசுவோம். ஒருமுறை, 'சார், காசிக்குப் போயிட்டு வருவோமா? அங்குதான் படப்பிடிப்பு நடக்கிறது' என்று அழைத்தார். 'அது பிரதமர் மோடியின் தொகுதி என்பதால் காசி மட்டும் வேண்டாம் சார். வேறு எங்கு வேண்டுமானாலும் வருகிறேன்' என்றேன். உடனே,  'நம்ம  2 பேரும் காசிக்கு பாவத்தைப் போக்கப் போகவில்லை சார். காசியில் உள்ள அழுக்கைப் பார்க்கப் போவோம்' என்றார். அந்த ஒருநாள் மட்டும்தான் 'ஜிப்ஸி' படப்பிடிப்புக்குச் சென்று, காசியின் அழுக்கைப் பார்த்துவிட்டு வந்தேன்.

இன்னமும் 3 தினங்களில், இந்தியாவில் உள்ள மொத்த அழுக்கையும் போக்குகிறோமா அல்லது எல்லோரும் அழுக்காகிப் போகிறோமா என்பது தெரிய இருக்கிறது. தமிழனாக இருக்கக்கூடிய யாரும் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. ஏனென்றால், நிச்சயமாக தமிழ்நாட்டில் அவர்கள் ஒரு சீட்டைக்கூட வாங்க மாட்டார்கள். எனவே, நாம் பெருமையாக, நம்பிக்கையாக இருக்கலாம்.

தேனிசை செல்லப்பா பற்றி இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. ஈழத்தில் நடந்த கொடுமைகளுக்கு, தன் பாடல்கள் மூலமாக நிதி திரட்டிக் கொடுத்த ஒரே போராளி பாடகர் செல்லப்பா மட்டுமே. 'ஜிப்ஸி' வெற்றிப் படம்தான் என்பதில் சந்தேகமில்லை. இன்னும் 3 தினங்கள் கழித்து வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள், இந்தப் படத்தின் வெற்றியை நிச்சயமாகத் தீர்மானிக்கும். அதே முடிவு, இப்படத்துக்கு எத்தனை தேசிய விருதுகள் என்பதையும் தீர்மானிக்கும்” என்று பேசினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios