Asianet News TamilAsianet News Tamil

இரண்டு கிராமி விருதுகளை வாங்கிய பிரபல பாடகர் கொரோனாவிற்கு பலி! சோகத்தில் ரசிகர்கள்!

கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், துரதஷ்ட வசமாக பல உயிர்களை உலகளவில் கொரோனா கொன்றுவிட்டது. இதுவரை இதற்கான மறுத்து கண்டுபிடித்து விட்டதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் உலக அளவில் பல ஆராச்சியாளர்கள் கொரோனா மருந்தை கண்டுபிடிக்க போராடி வருகிறார்கள்.
 

grammy award famous singer death in corona
Author
Chennai, First Published Apr 8, 2020, 6:41 PM IST

கொரோனா கோர தாண்டவம்:

கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், துரதஷ்ட வசமாக பல உயிர்களை உலகளவில் கொரோனா கொன்றுவிட்டது. இதுவரை இதற்கான மறுத்து கண்டுபிடித்து விட்டதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் உலக அளவில் பல ஆராச்சியாளர்கள் கொரோனா மருந்தை கண்டுபிடிக்க போராடி வருகிறார்கள்.

தொடரும் சோகம்:

கொரோனாவில் இருந்து இளம் வயதினர் மற்றும் நடுத்தர வயதினர் பலர் மீண்டு, உடல் நலம் தேறி வந்தாலும், 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கொரோனாவால் தாக்கப்பட்டால் அவர்களை மீட்பது மருத்துவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

grammy award famous singer death in corona

பிரபல பாடகர் மரணம்:

கடந்த வாரத்தில் இருந்தே கொரோனா வைரஸ் காரணமாக பல பிரபலங்கள், தொடர்ந்து உயிரிழந்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது, பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாய் பெனெடிக் காலமானதாக வெளியான அதிர்ச்சி தகவலில் இருந்தே இன்னும் ரசிகர்கள் மீளாத நிலையில், மற்றொரு ஹாலிவுட் பிரபலம் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார்.

73 வயதாகும்  ஹாலிவுட்டை சேர்ந்த பிரபல பாடகர், மற்றும் பாடலாசிரியரான ஜான் பிரின் கொரோனாவால் தற்போது காலமாகியுள்ளார்.

grammy award famous singer death in corona

 

கடந்த மாதம்  17 ஆம் தேதி அன்று அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து, இவரை பரிசோதித்த மருந்துகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தனர்.

தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.  இரண்டு முறை கிராமி விருது பெற்ற இவரின் மறைவு ஹாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பலர் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios