உலகநாயகன் கமல் ஹாசன், ஒரு பக்கம் பிக்பாஸ் ஷூட்டிங், மறு பக்கம் திரைப்படம் என மிகவும் பிஸியாக நடித்து கொண்டிருந்தாலும். தான், புதிதாக ஆரம்பித்திருக்கும் கட்சியான 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் பணிகளிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.

அடுத்த வருடம் நடக்கவுள்ள நாடளுமன்ற தேர்தலில் அவரது கட்சி போட்டியிடவுள்ளது என்பதையும் சூசகமாக அவ்வப்போது தெரிவித்து வரும் கமல், கட்சியின் உள்ளமைப்பை மிகவும் வலுவாக கட்டமைத்து வருவதாகவும் கூறப்படுகிது.

இந்நிலையில், 10 வருடங்களுக்கு மேல், கமல் ஹாசனுடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து, பின் கருத்து வேறுபாடு காரணமாக சென்ற ஆண்டு அவரை விட்டு பிரிந்தார் கௌதமி. கௌதமி புற்றுநோய்க்காக  சிகிச்சை பெற்ற போது உடன் இருந்து கவனித்து வந்தவர் கமல்ஹாசன். ஆனால் தன்னுடைய மகளின் எதிர்காலத்திற்காகவும், கருத்து வேறுபாடு காரணமாகவும் இருவரும் சமரசமாக பிரிந்து விட்டனர்.

இந்நிலையில், கமல் ஒரு பக்கம் மக்கள் நீதி மய்யம் நன்கு செயல்பட போராடி வரும் சமயத்தில், இவருக்கு எதிராக பிரச்சாரம் செய்ய உள்ளேன் என கவுதமி கூறி இருப்பது  அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது

கமல்ஹாசன் அவ்வப்போது பாரதிய ஜனதா கட்சியை விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில், பாரதிய  ஜனதா கட்சிக்கு தான் கவுதமி ஆதரவு கொடுத்து அவரும் தேர்தகளில் பெரிய அளவில் பிரச்சாரம் செய்ய  உள்ளதாக கூறப்படுகிறது.
 

இதனால் கமல் ரசிகர்கள் பலர் கௌதமியிடம் 'நீங்கள் கமலுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளீர்களா? என சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் இதுவரை இந்த கேள்விக்கு கௌதமியின் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.