'மின்னலே', 'காக்க காக்க', 'நீதானே என் பொன்வசந்தம், போன்ற உயிரோட்டமான படங்களை இயக்கி, தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் இயக்குனர் கெளதம் மேனன்.

இதுவரை தான் இயக்கம் படங்களில் வரும் பாடல் காட்சிகளில் மட்டுமே அவ்வப்போது முகம் காட்டி வந்த இவர், தற்போது 'கோலி சோடா2-ல் போலீஸ் அதிகாரியாக முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். 

இந்நிலையில், தற்போது ஜெய் என்கிற புதுமுக இயக்குனர், இயக்கும் படத்தில்  கெளதம் மேனன் தான் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இயக்குனர் ஜெய், இந்த படத்தின் கதையை கௌதம் மேனனிடம் கூறி ஓகே வாங்கிவிட்டாராம்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாகவும், இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாப்பாத்திரத்தில் 'நாச்சியார்' படத்தில் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்த இவான நடிக்கிறாராம். ஆனால் இவனா கெளதம் மேனன் ஜோடியாக நடிக்க வில்லை என்றும், ஒரு பிரச்சனையில் சிக்கும் இவானாவை எப்படி கெளதம் மேனன் காப்பாற்றுகிறார் என்பதே கதை என்றும் படக்குழு வட்டாரத்தில் கூறப்படுகிறது.