Asianet News TamilAsianet News Tamil

பிக் பாஸ்ஸில் களமிறங்கியுள்ள கவர்ச்சி நடிகை...

Glamour dancer entry in bigg boss
Glamour dancer entry in bigg boss
Author
First Published Aug 17, 2017, 2:05 PM IST


பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்ட நிகழ்ச்சியாளர்கள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். காரணம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓவியா மனஉளைச்சல் காரணமாக வெளியேறியதால் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்த பலர் புறக்கணிக்க ஆரம்பித்து, டிஆர்பி மிகவும் குறைந்துள்ளது.

சமீபத்தில் தான் நடிகை பிந்து மாதவி பிக் பாஸ் களத்தில் குதித்தார். இதையடுத்து தற்போது பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியுள்ள சுஜா வருணி களமிறங்கியுள்ளார்.

இவர் மிளகா, பென்சில், போன்ற திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் நடித்துள்ளார். சமீப காலமாக திரைப்பட வாய்ப்புகள் அமையாமல் இருந்த இவர் தற்போது பிக் பாஸ் குடும்பத்திற்கு வருகை தந்துள்ளார். இனி என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.  

Follow Us:
Download App:
  • android
  • ios