தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளுக்கு உள்ள வரவேற்பு சில காலம் தான், அதிலும் தற்போது கவர்ச்சி நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்காமல் கதாநாயகிகளே ஏகப்பட்ட கவர்ச்சி காட்டி வருவதால். கவர்ச்சி நடனத்திற்கு மட்டுமே சில நடிகைகள் நடனமாடும் நிலை உள்ளது. 

இந்நிலையில், 80 மற்றும் 90களில் கவர்ச்சி நடிகையாகவும், குணசித்திர நடிகையாகவும் நடித்தவர் நடிகை ஷர்மிலி. 13 வயதில் குரூப் டான்சராக அறிமுகமான இவர், பின் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் சிறு சிறு வேடங்களில் நடிக்க துவங்கி அனைவராலும் கவனிக்க கூடிய நடிகையாக மாறினார்.

 

குறிப்பாக இவர் கவுண்டமணி, வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்கள் படத்தில் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

திருமணத்திற்கு பின்பு, கணவருடன் வெளிநாட்டில் செட்டில் ஆன இவர், பின்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று சென்னைக்கே திரும்பினார்.

இவருக்கு திருமணம் ஆன புதிதில் பல படங்களில் நல்ல கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்ததாம். ஆனால் அப்போது கணவரின் பேச்சை கேட்டு நடிக்காமல் விட்டு விட்டாராம். ஆனால் தற்போது இவர் பட வாய்ப்புகளை தேடி சென்றாலும் கிடைக்கவில்லை என மனவருத்தத்தோடு கூறியுள்ளார்.

இவருக்கு 35 வயது தான் ஆகிறது என்றாலும் உடல் பருமன் காரணமாக, இவருக்கு வயதான பெண் வேடத்தில் நடிக்கவும், வில்லி கதாப்பாத்திரத்தில் நடிக்கவும் மட்டுமே சிலர் அழைப்பதாகக கூறுகிறார்.  பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் சொந்த காலில் நிற்க வேண்டும் என்கிற உறுதியுடன் ஈவன்ட் பிளானர் வொர்க் செய்து கொண்டிருப்பதாக கூறிகிறார்.